3 இந்திய வீரர்களுக்கு கொரோனா!

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 6-ந் தேதி ஆமதாபாத்தில் நடக்கிறது. இதை யொட்டி இந்திய அணி வீரர்கள் கடந்த 31ஆம் தேதி ஆமதாபாத் சென்றனர். அவர்கள் அங்கு நட்சத்திர ஓட்டலில் 3 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் இந்திய அணியினருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 3 வீரர்கள் மற்றும் சில உதவியாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் விவரத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் உடனடியாக வெளியிடவில்லை. இருப்பினும் பேஸ்ட் மேன்கள் ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட் , ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

போட்டிகள் தொடங்க 3 நாட்களே உள்ள நிலையில், முன்னணி வீரர்கள் கொரோனாவில் சிக்கி இருப்பது இந்தியாவுக்கு சற்று பின்னடைவாக கருதப்படுகிறது. இதனால் மாற்று வீரர்கள் பட்டியலில் உள்ள தமிழக ஆல்- ரவுண்டர் ஷாரருக்கான், சாய்கிஷோர், ரிஷி தாவன் ஆகியோர் பிரதான அணியில் சேர்க்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.

நெருக்கடி நிலைக்கு இம்ரான் கான் அரசே காரணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்த நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…