பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா..!

பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாட உள்ளது. கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தான் சென்று விளையாட உள்ளது இரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் தற்போது உறுதி செய்துள்ளன.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற மார்ச் 4 முதல் தொடங்கி மார்ச் 8 வரை நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டி மார்ச் 29 முதல் தொடங்கி ஏப்ரல் 5 வரை நடைபெற உள்ளது. இதன் மூலம் 24 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.

இந்த டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் போட்டிகள் அடுத்து வர இருக்கும் உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கும் மற்றும் உலக கோப்பை தொடருக்கும் ஒரு முன்னோட்டமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா எதிரொலியின் காரணத்தினால் இந்த சுற்றுப் பயணம் சில நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இன்று இரு அணிகளுக்கும் இடையேயான தொடர் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர், கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் விளையாடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…