கனவு நினைவாகியது… மனம் திறக்கும் இளம் இந்திய வீரர்..!

இளம் கிரிக்கெட் வீரர் தீபக் ஹூடா இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியிடம் இருந்து தனது முதல் ஒருநாள் போட்டிக்கான தொப்பியினைப் பெற்றார். இந்த தருணத்தை நினைவு கூர்ந்த அவர் என்னுடைய கனவு நினைவாகி உள்ளது என தெரிவித்தார். விராட் கோலி இடம் இருந்து முதல் ஒருநாள் போட்டிக்கான தொப்பியினை பெறுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளார்.

நேற்று இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப்போட்டியில் அறிமுக வீரராக தீபக் ஹூடா களமிறங்கினார். அப்போது அறிமுக வீரராக களமிறங்கும் அவருக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது கையினால் தொப்பியை கொடுத்தார். இதனையடுத்து, தீபக் தனது கனவு நிறைவேறி உள்ளதாக தெரிவித்தார்.

தனது முதல் போட்டி குறித்து அவர் பேசியதாவது, என்னுடைய நாட்டுக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இதனை மிகப் பெரிய கவுரவமாக கருதுகிறேன். இது என்னுடைய வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான தருணம். இந்த தருணத்தில் என்னுடைய இந்தப் பயணத்தில் என் உடன் இருந்தவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

இந்தியா மேற்கிந்திய அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி இந்திய அணி விளையாடும் ஆயிரமாவது ஒரு நாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

நெருக்கடி நிலைக்கு இம்ரான் கான் அரசே காரணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்த நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…