சென்னை சூப்பர் கிங்ஸில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி… மனம் திறக்கும் இந்திய வீரர்..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட இடம் கிடைத்தால் நான் மகிழ்ச்சி அடைவேன் என இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் வரும் 12 மற்றும் 13-ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. மூத்த வீரர்கள், அதிரடி பேட்ஸ்மேன்கள், கிளாசிக் பவுலர்கள், மாஸான ஆல் ரவுண்டர்கள், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள், இளம் வீரர்கள் என பலர் இந்த ஏலத்தில் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர். அதில் ஒருவர்தான் தினேஷ் கார்த்திக். கடந்த சீசனில் கொல்கத்தா அணிக்காக விளையாடியவர்.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து எதிர்வரும் சீசனில் விளையாட வேண்டுமென தான் விரும்புவதாக அவர் கூறியுள்ளார். இதனை இதற்கு முன்னர் கூட அவர் கூறி இருந்தார். தமிழ்நாட்டை சேர்ந்த அவர் டெல்லி, பஞ்சாப், மும்பை, பெங்களூர், குஜராத், கொல்கத்தா அணிகளுக்காக விளையாடி உள்ளார்.

இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறியிருப்பதாவது, சென்னையை சேர்ந்தவன் நான். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நான் விளையாட வாய்ப்பு கிடைத்தால் அது சிறப்பானதாக இருக்கும். ஆனால், அது நம் கையில் இல்லை. எனக்கு எந்த அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கிறதோ அந்த அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். எதிர்வரும் சீசனுக்காக தீவிரமாக பயிற்சி செய்து வருகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….