இந்த இடத்திலும் விளையாட தயார்… இந்தியா அதிரடி வீரர் கருத்து..!

இந்திய அணியின் அதிரடி கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் தான் எந்த இடத்தில் விளையாடவும் தயார் என தெரிவித்துள்ளார். ஐந்தாவது இடத்தில் தான் விளையாட வேண்டும் என்பதில்லை. எந்த இடத்திலும் நான் விளையாட தயார் என தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் சூர்யகுமார் யாதவ் இவ்வாறு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. காணொளி மூலமாக பேட்டியளித்த அவர் அணி நிர்வாகம் எந்த இடத்தில் என்னை களம் இறக்கினாலும் விளையாட தயார் என தெரிவித்துள்ளார். அது இரண்டாவது இடமோ அல்லது 3-வது இடமோ அல்லது வேறு ஏதேனும் இடமோ என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், நான் நிறைய வலை பயிற்சி மேற்கொள்கிறேன். அது எனக்கு நன்றாக பேட் செய்ய உந்துதலாக இருக்கிறது. பந்து வீசுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அதற்கும் நான் தயாராக உள்ளேன் என அவர் தெரிவித்தார்.

இந்தியா மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.