ஐபிஎல் புதிய அணியின் பெயர் அறிவிப்பு… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

ஐபிஎல் 15-வது சீசனில் 2 புதிய அணிகள் அறிமுகமாக உள்ளதாக ஏற்கனவே பிசிசிஐ அறிவித்திருந்தது. அந்த இரு அணிகளுள் ஒன்று அகமதாபாத்தையும், மற்றொரு அணி லக்னோவையும் மையமாக கொண்டது. தற்போது அகமதாபாத் தனது ஐபிஎல் அணி குஜராத் டைட்டன்ஸ் என்ற பெயருடன் களம் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

உலகிலேயே மிகப் பெரிய மைதானமான குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தை தனது சொந்தமாக மைதானமாக வைத்து குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்குகிறது. குஜராத் மாநிலத்தை பெருமைப்படுத்தும் விதமாக இந்த புதிய பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், குஜராத் மாநிலம் பல்வேறு சிறந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே இந்தப் பெயரை அணி நிர்வாகம் தேர்ந்தெடுத்துள்ளது.

இந்த அணியை இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா வழிநடத்துவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இவரை தவிர ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி வரும் சுழற் பந்துவீச்சாளர் ரஷித் கான் இந்த அணிக்காக விளையாட உள்ளார். மேலும், இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் குஜராத் அணிக்காக விளையாட உள்ளார். இந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளராக கேரி கிறிஸ்டின் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெக்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் வருகிற பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. மேலும், ஐபிஎல் போட்டிகள் மார்ச் இறுதியில் தொடங்கி மே மாத இறுதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.