இரண்டாவது ஒருநாள் போட்டியில் தடுமாறும் இந்தியா..!

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இந்திய அணியின் சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் களமிறங்கினர். முதல் போட்டியில் அரைசதம் அடித்து அசத்திய கேப்டன் ரோகித் சர்மா இந்த போட்டியில் 5 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் சிறிது நிதானமாக விளையாடினாலும் இருவருமே 18 ரன்கள் எடுத்து தங்களது விக்கெட்டை பறி கொடுத்தனர். இதனால் இந்திய அணி 43 ரன்கள்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
தற்போது, கே.எல்.ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.