பந்துவீச்சை தேர்வு செய்த மேற்கிந்திய தீவுகள் அணி..!

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரான் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து, இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் சார்பில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இஷான் கிஷனுக்கு பதிலாக கே.எல்.ராகுல் அணிக்கு மீண்டும் திரும்பி உள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணியில் காயம் காரணமாக பொல்லார்டு இந்த போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ஒடியன் ஸ்மித் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

நெருக்கடி நிலைக்கு இம்ரான் கான் அரசே காரணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்த நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…