பேட்டிங்கைத் தேர்வு செய்த இந்திய அணி..!

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவன் களமிறங்கினர். இந்த ஜோடி விரைவிலேயே தங்களது விக்கெட்டை பறி கொடுத்து அதிர்ச்சி அளித்தது. ரோகித் சர்மா 13 ரன்களிலும், ஷிகர் தவன் 10 ரன்களிலும் ஆட்டம் இழந்து வெளியேறினர். இதனை அடுத்து களம் கண்ட முன்னாள் கேப்டன் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் இந்திய அணிக்கு மேலும் சிக்கல் அதிகரித்தது.
இத்தகைய சூழலில் இந்திய அணியின் இளம் வீரர்கள் ஸ்ரேயஷ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சற்று முன் வரை இந்திய அணி 111 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.