ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலம் தொடங்கியது..!

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் பல நாட்களாக எதிர்பார்த்து வந்த 15-வது சீசன் ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலம் பெங்களூரில் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் புதிதாக அறிமுகமான இரண்டு அணிகள் உட்பட 10 அணிகள் தங்களுக்கான வீரர்களை ஏலம் எடுத்து வருகின்றனர்.
இதுவரை நடந்து முடிந்துள்ள ஏலத்தில் விற்பனையான வீரர்கள் விவரம் பின்வருமாறு,
- ஷிகர் தவன் (8.25 கோடி) – பஞ்சாப் கிங்ஸ்
- ரவிச்சந்திரன் அஸ்வின் (5 கோடி) – ராஜஸ்தான் ராயல்ஸ்
- பாட் கம்மின்ஸ் (7.25 கோடி) – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
- காகிசோ ரபாடா (9.25 கோடி) – பஞ்சாப் கிங்ஸ்
- ஸ்ரேயஸ் ஐயர் (12.25 கோடி) – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
- டூ பிளஸ்ஸி ( 7 கோடி) – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
- முகமது சமி (6.25 கோடி) – குஜராத் டைட்டன்ஸ்
- குயின்டன் டி-காக் (6.75 கோடி) – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
- டேவிட் வார்னர் (6.25 கோடி) – டெல்லி கேப்பிடல்ஸ்
- மனிஷ் பாண்டே (4.60 கோடி) – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்