கடும் போட்டிக்கு இடையே சென்னையிடமிருந்து ஷாருக்கானை ஏலத்தில் வாங்கிய பஞ்சாப்..!

ஐபிஎல் 15-வது சீசனுக்கான ஏலம் இன்று பெங்களூரில் தொடங்கியுள்ளது. இன்று தொடங்கிய இந்த ஏலத்தில் பல்வேறு முன்னணி வீரர்கள் ஏலம் விடப்பட்டுள்ளனர். சில இளம் வீரர்களை ஏலத்தில் எடுக்க அணி உரிமையாளர்களிடம் கடுமையான போட்டி நிலவியது. அவர்களுள் முக்கியமானவர் தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஷாருக்கான்.

தமிழக வீரரான ஷாருக்கானை ஏலம் எடுப்பதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே கடுமையான போட்டி நடைபெற்றது. இறுதியாக, ரூ. 9 கோடிக்கு ஷாருக்கானை பஞ்சாப் அணி தக்க வைத்துக் கொண்டது.தமிழக வீரரான ஷாரூக்கான் சமீப காலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். உள்ளூர் போட்டிகளிலும் தன்னுடைய அதிரடியான ஆட்டத்தின் மூலம் அனைவரது கவனைத்தையும் ஈர்த்தார்.

நடப்பு சையத் முஷ்டாக் அலி தொடரின் இறுதிப் போட்டியில் ஷாருக்கான் அதிரடியில் தமிழ்நாடு த்ரில் வெற்றி பெற்றது. கடைசி பந்தில் தமிழ்நாடு அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட சிக்ஸர் விளாசி கோப்பையை வென்றுக் கொடுத்தார் ஷாருக். தோனியை போலவே கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அவர் மாஸ் காட்டியிருந்தது அன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

2021 ஐபிஎல் சீசனில் ஷாருக்கான், பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார். தற்போது மீண்டும் அதே அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.