டு பிளசிஸ் போனா என்ன கான்வே இருக்க பயமேன்…தட்டித் தூக்கிய சிஎஸ்கே..!

சென்னை அணியின் நம்பிக்கை நாயகனாக இத்தனை ஆண்டுகள் தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய தென்ஆப்பிரிக்கா வீரர் டு பிளசிஸ் நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் 7 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இதனால் சென்னை அணி தனது தொடக்க ஆட்டக்காரராக யாரை களமிறக்கும் என்ற கேள்வி எழுந்தது.
அதற்கு பதிலளிக்கும் விதமாக நியூசிலாந்து வீரர் டெவின் கான்வேவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. நியூசிலாந்து வீரர் டெவின் கான்வேவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. சிஎஸ்கேவில் தொடக்க வீரராக விளையாடி வந்த டூபிளசிஸை பெங்களூர் அணி தட்டிச் சென்ற நிலையில், அந்த இடத்தை நிரப்புவதற்கான வீரரை அணி நிர்வாகம் தேடிவந்தது. இந்நிலையில் அதிரடி ஆட்டத்திற்கு பெயர்போன இவரை, சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக களமிறக்க அதிக வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.
115 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள கான்வே 3765 ரன்கள் எடுத்துள்ளார். இதில் இரண்டு சதங்களும், 28 அரைசதங்களும் அடங்கும். 3 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 225 ரன்கள் எடுத்துள்ளார். 5 டெஸ்ட் போட்டிகளில் 623 ரன்கள் குவித்துள்ளார்.