சிஎஸ்கேவில் சிவம் தூபே… விறுவிறுப்பான ஐபிஎல் ஏலம்..!

ஐபிஎல் மெகா ஏலம் நேற்று முதல் தொடங்கியது. நேற்று பல முக்கிய வீரர்கள் ஏலம் போன நிலையில் இன்று இரண்டாம் நாள் ஏலம் தொடங்கியது. இன்று தொடங்கிய ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல்ரவுண்டர் சிவம் தூபேவை 4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
முன்னதாக, முதல் நாள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பிராவோ, தீபக் சஹர், அம்பத்தி ராயுடு போன்ற நட்சத்திர வீரர்களை மீண்டும் சென்னை அணிக்கே ஏலத்தில் எடுத்தது.
இந்நிலையில், இன்றைய ஏலத்தில் சிவம் தூபே வாங்கப்பட்டுள்ளார். இன்னும் சென்னை சூப்பர் கிங்ஸ் 10 வீரர்களை வாங்க முடியும். அதனிடம் கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் கையிருப்பில் உள்ளது.