இவரை ஏலத்தில் எடுக்காதது ஏமாற்றமளிக்கிறது… இர்பான் பதான் கருத்து..!

ஐபிஎல் மெகா ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அதில் பங்குபெற்ற 10 அணிகளின் உரிமையாளர்களும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்தனர். இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன் குவித்த அவர்களில் ஒருவராக வலம் வரும் சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலம் எடுக்காதது ஏமாற்றமளிக்கிறது என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, ஐபிஎல் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் 40 வயதிலும் கூட விளையாடுவதை பார்த்திருக்கிறோம். சுரேஷ் ரெய்னாவுக்கு வயது 35 தான். ஆனால், அவரை எந்த அணியும் ஏலம் எடுக்க முன்வராதது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்றார்.

அதே போல இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மெகா ஏலத்தில் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஆரோன் ஃபின்ச், நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்டில் ஆகியோரையும் இந்த ஏலத்தில் எந்த அணியினரும் ஏலம் கேட்க ஆர்வம் காட்டவில்லை. மேலும், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இசாந்த் சர்மாவும் எந்த அணியாலும் ஏலம் கேட்கப்படவில்லை.

இதற்கிடையில், இஷான் கிஷன், தீபக் சஹர் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் போன்ற இளம் வீரர்கள் கோடிக்கணக்கில் நல்ல விலைக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.