இவரை ஏலம் எடுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது… ராஜஸ்தான் ராயல்ஸ் ஓனர் புலம்பல்..!

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் முன்னாள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரை ஏலத்தில் எடுக்காதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான மனோஜ் படேல் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூபாய் 8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அவரை ஏலத்தில் எடுத்த போதிலும் இந்த ஆண்டு அவரால் ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியாது. காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் அவர் அடுத்த சீசனில் களமிறங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ஜோஃப்ரா ஆர்ச்சரை ஏலத்தில் எடுக்காதது ஏமாற்றமளிக்கிறது என தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இதுகுறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் கூறியதாவது, ஜோஃப்ரா ஆர்ச்சர் ஒரு மிகச்சிறந்த வீரர். அவரை ஏலத்தில் எடுக்காதது ஏமாற்றமாக உள்ளது. அவர் எங்கள் அணியின் ஒரு முக்கிய அங்கமாக திகழ்ந்தார். அவரை நாங்கள் 9 கோடிக்கு தக்க வைத்திருந்தால் ஏலத்தில் இப்போது எடுத்திருக்கும் வீரர்களை போல் ஒரு அணியினை கட்டமைத்து இருக்க முடியாது. நாங்கள் எங்களால் முடிந்தவரை அவரை ஏலத்தில் எடுக்க முயற்சித்தோம். ஆனால், தொகை அதிகமானதால் எங்களால் முடியவில்லை என்றார். அவர் விரைவில் காயத்திலிருந்து மீண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த எங்களது வாழ்த்துக்கள் என கூறினார்.

ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலம் நேற்றுடன் நிறைவடைந்தது நிலையில், ஐபிஎல் போட்டிகள் வருகிற மார்ச் மாத இறுதி முதல் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…