விராட் கோலியின் ரன்கள் இந்திய அணிக்கு முக்கியம்… முன்னாள் கிரிக்கெட் வீரர் கருத்து..!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜித் அகர்கர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் ரன்கள் மிகவும் முக்கியம் என தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாக வலம் வந்து கொண்டிருந்த விராட் கோலி அண்மையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் போது டி20 போட்டிகளில் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதன்பின் அவரை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் கேப்டன் பதவியிலிருந்து பிசிசிஐ நீக்கியது. டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஒரே கேப்டன் இருப்பதுதான் அணிக்கு நல்லது என கூறப்பட்டது. அதன்பின் விராட் கோலி தனது டெஸ்ட் கேப்டன் பதவியையும் துறந்தார். இதன் மூலம் விராட் கோலி இந்திய அணியின் ஒரு வீரராக மட்டுமே விளையாடி வருகிறார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் மூன்று போட்டிகளில் அவர் 8,18 மற்றும் 0 ரன்கள் முறையே எடுத்தார். இந்நிலையில் இன்று இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜித் அகர்கர் விராட் கோலியின் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியம் என தெரிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி 3 க்கு 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதனையடுத்து, நாளை முதல் டி20 போட்டியில் தொடங்க உள்ளன.

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி நாளை முதல் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.