இம்மாத இறுதியில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி..!

இந்த மாத இறுதியில் இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்தப் போட்டிகள் வருகிற பிப்ரவரி 24 முதல் தொடங்க உள்ளன. முன்னதாக இப்போட்டிகள் பிப்ரவரி 25 முதல் நடைபெற இருந்தது. போட்டி நடத்துவதில் சில மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணிக்கான அட்டவணையில் பிசிசிஐ திருத்தம் மேற்கொண்டு அறிவித்துள்ளது. அதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் வருகிற பிப்ரவரி 24 முதல் தொடங்க உள்ளது. அதனைத் தொடர்ந்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் 2021- 23 ஆம் ஆண்டு நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி சுற்றாக எடுத்து கொள்ளப்படும்.

3 t20 போட்டிகளில் முதல் டி20 போட்டி லக்னோவில் நடைபெறும் எனவும், மற்ற இரண்டு போட்டிகளும் தர்மசாலாவில் நடைபெறும் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை முதல் டெஸ்ட் மொஹாலியில் மார்ச் 4 முதல் தொடங்கி மார்ச் 8 வரை நடைபெற உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் மார்ச் 12 ஆம் தேதியிலிருந்து 16 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்தியா தற்போது மேற்கு இந்திய அணிகளுக்கு எதிரான தொடரில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.