முதல் ரஞ்சியிலேயே வச்சி செய்யும் யாஷ் துல்..!

இந்திய 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணியின் கேப்டன் யாஷ் துல் தனது முதல் ரஞ்சி போட்டியிலேயே அடுத்தடுத்த இன்னிங்சில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.

தமிழ்நாடு அணிக்கு எதிராக டொமஸ்டிக் கிரிக்கெட்டில் அடுத்தடுத்த சதங்களை அவர் பதிவு செய்துள்ளார். இவர் அண்மையில் முடிந்த ஜூனிய உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை சாம்பியன் பட்டம் வெல்ல செய்த கேப்டனாவார். 

இரண்டாவது இன்னிங்ஸில் 202 பந்துகளுக்கு 113 ரன்கள் எடுத்தார். அவரது அசத்தலான ஆட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த போட்டியில் தமிழ்நாடு வீரர்கள் பாபா இந்தரஜித் மற்றும் ஷாருக்கான் முதல் இன்னிங்ஸில் சதம் விளாசியிருந்தார். இந்த போட்டியில் சமனில் நிறைவடைந்துள்ளது. 

கடந்த 17-ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் ஜூன் 26-ஆம் தேதியன்று நிறைவு பெறுகிறது. மொத்தம் 38 அணிகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடுகின்றன. தமிழ்நாடு அணி வரும் 24-ஆம் தேதி சத்திஸ்கர் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. 

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….