கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் இந்திய வீராங்கனை..!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை வி ஆர் வனிதா அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். 31 வயதான அவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், சக வீராங்கனை கோஸ்வாமி மற்றும் தனக்கு ஊக்கமளித்த குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஓய்வு குறித்து அவர் கூறியிருப்பதாவது , 19 ஆண்டுகளுக்கு முன்னதாக கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன். அப்போது சிறுமியாக இருந்த நான் கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டிருந்தேன். இன்றளவும் கிரிக்கெட் மீதான என்னுடைய ஆர்வம் அப்படியேதான் இருக்கிறது. ஆனால், திசை மட்டும் மாறியிருக்கிறது. என்னுடைய மனது தொடர்ந்து கிரிக்கெட் விளையாட சொல்கிறது. ஆனால்,என்னுடைய உடல் போதும் நிறுத்து எனக் கூறுகிறது. நான் இன்று என்னுடைய உடல் கூறுவதை கேட்க முடிவு செய்துள்ளேன். என்னுடைய காலணிகளுக்கு ஓய்வு கொடுக்கும் நேரம் வந்துவிட்டது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், நான் என்னுடைய ஓய்வு முடிவை இன்று அறிவிக்கிறேன். இத்தனை ஆண்டுகள் கிரிக்கெட் பயணத்தில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள் மற்றும் மறக்க முடியாத தருணங்கள் போன்றன எனக்கு நினைவுகளாக கிடைத்துள்ளன. இந்திய அணியில் ஒருவராக விளையாடுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைப்பதற்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்றார்.

வி ஆர் வனிதா இதுவரை 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் 16 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முதன் முறையாக கடந்த 2014 ஆம் ஆண்டு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

நெருக்கடி நிலைக்கு இம்ரான் கான் அரசே காரணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்த நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…