வலைப்பயிற்சியில் பும்ராவை சந்திக்க தயார்… இளம் வீரர் பேட்டி..!

இந்த ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் கடந்த பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த ஏலத்தில் பல்வேறு வீரர்கள் எடுக்கப்பட்டனர். அதில் ஒருவர் தான் சிங்கப்பூரைச் சேர்ந்த இளம் வீரர் டிம் டேவிட். தற்போதும் அவர் வலைப்பயிற்சியில் பும்ராவை சந்திக்க ஆவலாக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற இரண்டாவது நாள் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி டிம் டேவிட்-ஐ ரூ. 8.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அவர் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சாளர் பும்ராவை வலைப்பயிற்சியில் சந்திப்பதற்கு ஆர்வமாக உள்ளேன் என கூறியுள்ளார். அவரது பந்துகளை எதிர்கொள்வது சவாலானது.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, நான் ஒருவருடைய பந்துவீச்சில் வலைப்பயிற்சியில் அதிகம் விளையாட விரும்பினால் அது பும்ராவின் பந்துவீச்சாகத் தான் இருக்கும். நான் கூறுவதை கேட்பதற்கு வித்தியாசமாகத்தான் இருக்கும். ஆனால், அவர் ஒரு மிகச் சிறந்த பந்துவீச்சாளர். அதனால் அவருடைய பந்துவீச்சில் நான் அதிகம் விளையாட விரும்புகிறேன் என்றார்.
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் வருகிற மார்ச் மாத இறுதியில் தொடங்கி ஏப்ரல் இறுதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.