என்னை தவறாக பயன்படுத்துவது வேதனையாக உள்ளது… சச்சின் டெண்டுல்கர் பேட்டி..!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய புகைப்படத்தை சிலர் சமூக வலைதளங்களில் மார்பிங் செய்து சூதாட்டம் விளையாடுவதற்கு ஆதரவாக விளம்பரம் செய்வது போன்று பரப்பி வருவதாகவும், அவர்களின் இந்த செயல் தன்னை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்கள் வைரலானதைத் தொடர்ந்து டெண்டுல்கர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டர் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது, சமூக வலைதளங்களில் என்னுடைய புகைப்படத்தை பயன்படுத்தி நிறைய விளம்பரங்கள் வருவதை கண்டேன். அதில் நான் சூதாட்டங்களை ஆதரிப்பது போல் பேசுவதாக அமைந்துள்ளது. என்னுடைய புகைப்படம் மார்பிங் செய்யப் பட்டுள்ளது. நான் ஒருபோதும் சூதாட்டங்களை ஆதரிக்க மாட்டேன். மேலும், மது மற்றும் புகையிலை போன்றவற்றை ஆதரித்தும் நடிக்க மாட்டேன் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், என்னுடைய சட்ட வல்லுநர்கள் குழு இது தொடர்பாக சட்டரீதியாக விசாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இருப்பினும், இதனை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என விரும்பினேன். அதன் காரணமாக இந்த டுவிட்டர் பதிவினை வெளியிட்டேன் என்றார்.

சச்சின் டெண்டுல்கர் கடந்த 2013-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இன்றைய நாள் வரை அவருடைய சாதனையை யாரும் முறியடிக்கவில்லை. கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையை அவர் தன் வசம் வைத்துள்ளார். அவர் மொத்தமாக அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் 34,357 ரன்கள் குவித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக இலங்கை அணியின் குமார் சங்ககாரா இரண்டாவது இடத்தில் உள்ளார்.

46 வயதாகும் சச்சின் டெண்டுல்கர் தனது கிரிக்கெட் பயணத்தை அவரது 16-வது வயதில் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…