புஷ்பாவாக மாறிய ரவீந்திர ஜடேஜா… வைரலாகும் வீடியோ..!

நேற்று நடந்த இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பல மாதங்களுக்கு பிறகு அணிக்கு திரும்பிய ரவீந்திர ஜடேஜா, தனது வழக்கமான மாயஜால பந்து வீச்சை வீசினார். அதனை எதிர்கொள்ள முடியாமல் இலங்கை வீரர்களும் திணறினர்.
குறிப்பாக இலங்கை அணியின் நட்சத்திர வீரர் சந்திமாலின் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார். வீழ்த்தியவுடன் புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜூன் தாடியை ஸ்டைலாக தடவும் முகபாவனையை ஜடேஜா செய்தார். அவரின் இந்த ஸ்டைலை கண்டு ரோகித் சர்மா வியப்புடன் கட்டிப்பிடித்து பாராட்டினார். தற்போது இந்த காட்சியை ரசிகர்கள் அதிகளவில் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
ஜடேஜா, இந்த இன்னிங்சில் 4 ஓவர்களை வீசி 28 ரன்களை விட்டு கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். ஜடேஜா அணியின் முக்கிய ஆல்-ரவுண்டர் என்று போட்டிக்கு முன் ரோகித் சர்மா கூறியிருந்தார். ஜடேஜா திரும்பியது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அவரது வருகை அணியின் பலத்தை அதிகரிக்கும் என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.