பந்து வீச்சை தேர்வு செய்த இந்திய அணி..!

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று தர்மசாலாவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்திய அணி ஆடும் லெவனில் எந்த ஒரு மாற்றமும் செய்யாமல் களமிறங்குகிறது. அதே நேரத்தில் இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக இந்திய அணியின் ருத்ராஜ் கெய்க்வாட் இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து விலகுவதாக பிசிசிஐ அறிவித்தது. அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் மீதமுள்ள 2 போட்டிகளிலும் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்ததையடுத்து இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

நெருக்கடி நிலைக்கு இம்ரான் கான் அரசே காரணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்த நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…