மூன்றாவது டி20 போட்டியில் தடுமாறும் இலங்கை அணி..!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நிசங்கா மற்றும் குணத்திலகா களம் இறங்கினர். போட்டியின் ஆரம்பம் முதலே இலங்கை அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான நிசங்கா 1 ரன்னிலும், குணத்திலகா 0 இரண்டிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.
இதனையடுத்து, களமிறங்கிய அசலங்கா 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற இலங்கை அணி குறுகிய நேரத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தற்போது வரை 4 விக்கெட்டுகளை இழந்து 47 ரன்கள் எடுத்து இலங்கை அணி திணறி வருகிறது.