இவரா பஞ்சாப் அணியின் கேப்டன்… அப்போ ராகுல் கேப்டன் இல்லையா..!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 15-ஆவது சீசன் மார்ச் 26-ஆம் தேதி தொடங்கி, மே 29-ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த முறை 10 அணிகள் மோதுவதால் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்கேற்ப விதிமுறைகளும் மாற்றப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்களது கேப்டன்களை அறிவித்திருந்த நிலையில் பஞ்சாப் அணிக்கு யார் கேப்டனாக பொறுப்பேற்க போகிறார் என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. முன்னதாக கே.எல்.ராகுல் பஞ்சாப் அணியின் கேப்டனாக பதவி வகித்து வந்தார். இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக மயங்க் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

. கடந்த ஆண்டு பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த கே.எல். ராகுல் இந்த வருடம் லக்னோ அணியில் இடம்பெற்று அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக கர்நாடக வீரர் மயங்க் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. 2018 முதல் அந்த அணியில் மயங்க் அகர்வால் இடம்பெற்று அதிக ரன்களைக் குவித்து வருகிறார். ஐபிஎல் ஏலத்தில் ஷிகர் தவன், ஜான் பேர்ஸ்டோ, ஷாருக் கான், ரபாடா ஆகிய முக்கியமான வீரர்களை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *