இவர்கள் உண்மையிலேயே இந்தியர்களா..? ஷமி இப்படிக் கூறக் காரணம் என்ன..?

இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக படுதோல்வி அடைந்தது. அப்போது இந்திய கிரிக்கெட் அணியின் பவுலர் முகமது ஷமியை அவர் நம்பிக்கை வைத்துள்ள மதத்தை சார்ந்து சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்திருந்தனர். அதற்கு அப்போதைய இந்திய கேப்டன் கோலியும் தனது எதிர்ப்புகளை தெரிவித்திருந்தார். மேலும் பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் ஷமிக்கு ஆதரவாக பேசி வந்தனர்.

இந்த நிலையில் அது குறித்து தனது மனம் திறந்து பேசியுள்ளார் முகமது ஷமி. 

“ அதில் அவர் கூறியிருப்பதாவது,

இது மாதிரியான சிந்தனைகளுக்கு மருந்தே கிடையாது. மதத்தின் அடிப்படையில் ட்ரோல் செய்பவர்கள் உண்மையான கிரிக்கெட் ரசிகராக இருக்க முடியாது. ஏன் அவர் இந்தியராக கூட இருக்க முடியாது. ஒரு வீரரை ஹீரோவாக பார்ப்பவர்கள் இப்படி நடந்து கொள்ள மாட்டார்கள். அப்படி நடப்பவர்கள் இந்திய ரசிகரும் அல்ல. அதனால் அது மாதிரியான மக்களிடமிருந்து வரும் கமெண்டுகளை கண்டு மனம் தளரக்கூடாது என ஷமி தெரிவித்துள்ளார். 

கடந்த டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 3.5 ஓவர்கள் வீசி 43 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார் ஷமி. அவர் அந்த போட்டியில் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *