இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்பான்சர் யார் தெரியுமா..?

கடந்த மாதம் பெங்களூருவில் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்றது. அதன்பின் வருகிற மார்ச் 26 முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. போட்டிகள் மார்ச் 26-ல் துவங்கி மே மாத இறுதி வரை நடைபெற உள்ளது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது அந்த அணியின் ஸ்பான்சர் யார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக அளவு ரசிகர்களைக் கொண்ட அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் விளங்குகிறது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிரதான ஸ்பான்சராக எஸ்என்ஜே குழுமம் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி எஸ்என்ஜே குழுமம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு பிரதான ஸ்பான்சராக இருக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் எஸ்என்ஜே குழுமம் இணைந்து நாடு முழுவதும் சிஎஸ்கே அணியின் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் பல நடவடிக்கைகளை கூட்டாக மேற்கொள்ளும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சள் நிற ஜெர்சியில் இனி எஸ்என்ஜே குழுமத்தின் லோகோ இடம்பெறும். இதன் மூலம் இந்த பிராண்ட் மேலும் பிரபலமாகும் என்று எஸ்என்ஜே குழுமத்தின் தலைவர் எஸ்.என். ஜெயமுருகன் தெரிவித்தார். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துவதாக இந்த கூட்டணி அமையும் என்றும் மஞ்சள் நிற ஜெர்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகும் என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமைச் செயல் அதிகாரி கே.எஸ். விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.