ஐபிஎல் போட்டியில் சுரேஷ் ரெய்னா..?

ஐபிஎல் 15-வது சீசனுக்கான கடந்த பிப்ரவரி மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த ஆண்டு ஐபிஎல் ஏலம் புதிதாக இரண்டு அணிகளுடன் நடைபெற்றதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியது. ஆனால், ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன் குவித்தவர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா எந்த அணியாலும் வாங்கப்படாதது ரசிகர்களை பெரிதும் ஏமாற்றம் அடையச் செய்தது. இந்நிலையில், சுரேஷ் ரெய்னா மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் விலகிய நிலையில், அவருக்குப் பதிலாக சுரேஷ் ரெய்னாவை ரசிகர்கள் தேர்வு செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர். இதன் மூலம் அவர் அந்த அணியால் வாங்க படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

2022-ம் ஆண்டுக்கான 15-வது சீசன் ஐ.பி.எல். தொடர், வரும் மார்ச் 26-ம் தேதி முதல் துவங்கி மே 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த வருடம் புதிதாக 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 10 அணிகள் பங்கேற்கும் லீக் போட்டிகள் மும்பையில் நடைபெற உள்ளது.

ஐபிஎல் தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இங்கிலாந்தின் முன்னணி வீரரான ஜேசன் ராய், குடும்பத்துடன் நேரம் செலவிட உள்ளதால், ஐபிஎல் போட்டிகளில் இருந்து வெளியேறுவதாக நேற்று அறிவித்தார். குஜராத் டைட்டன்ஸ் அணி இவரை அடிப்படை தொகையான ரூ.2 கோடிக்கு வாங்கியது.

இந்நிலையில், இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் விலகியதை அடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது. ஐபிஎல் போட்டிகளில் அதிக ஸ்கோர் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் 5 இடங்களில் இருப்பவர் சுரேஷ் ரெய்னா. ஆனால், கடந்த 2 வருடங்களாக பார்மில் இல்லாததால், சிஎஸ்கே உள்பட எல்லா அணிகளும் அவரை அணியில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *