பஸ் டிரைவராக மாறிய தோனி… காரணம் என்ன தெரியுமா..?

இந்த ஆண்டு ஐபிஎல் 15-வது சீசன் இந்தியாவில் வருகிற மார்ச் 26 முதல் தொடங்க உள்ளது. ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதாக அறிவிப்பு வெளியான நாள் முதலே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். அவர்களுக்கு மேலும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக ஐபிஎல் விளம்பரப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த விளம்பரத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பஸ் டிரைவர் தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்தனர். இந்த ஆண்டு புதிதாக இரண்டு அணிகள் ஐபிஎல் போட்டிகளில் சேர்க்கப்பட்டுள்ளன. அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய இரண்டு அணிகளை இந்த ஆண்டு புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும்.

ஐபிஎல் ஏலம் முடிவடைந்த பிறகு எப்போது ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்களின் செவிகளுக்கு விருந்து அளிக்கும் விதமாக அண்மையில் பிசிசிஐ ஐபிஎல் போட்டிகள் வருகிற மார்ச் 26 முதல் தொடங்கி மே 29 வரை நடைபெறும் என அறிவித்தது. இதனால், ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். அவர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் விதமாக இன்று ஐபிஎல் புரமோஷன் விளம்பர வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் மகேந்திரசிங் தோனி ஒரு பஸ் டிரைவர் போல நடித்துள்ளார். அவரது கையில் ஒரு மோதிரம் இருக்கிறது. அதில் அவரது அதிர்ஷ்ட எண் நம்பர் 7 என்பது இடம்பெற்றிருக்கிறது. ஐபிஎல் போட்டிகள் தொடங்க சில நாட்களே இருக்கும் நிலையில் இந்த புரோமோஷன் வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.