கபில் தேவின் சாதனையை முறியடித்த ஜடேஜா..!

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், முன்னாள் கேப்டன் கபில் தேவின் 35 ஆண்டு கால சாதனையை ரவீந்திர ஜடேஜா முறியடித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக மொகாலியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு, 574 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 175 ரன்கள் குவித்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி, இரண்டாவது நாளில் சீரான வேகத்தில் ரன்களை குவித்தது. சிறப்பாக விளையாடி ரவீந்திர ஜடேஜா சர்வதேசப் போட்டியில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார்.

மறுமுனையில் விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் 61 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக விளையாட வந்த ஜெயந்த் யாதவ் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் முகமது ஷமியுடன் இணைந்து ஜடேஜா, அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். ஸ்கோர் 574 ஆக இருந்த போது ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார். ரவீந்திர ஜடேஜா 175 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் 175 ரன்கள் குவித்த ரவீந்திர ஜடேஜா, முன்னாள் கேப்டன் கபில் தேவின் 35 ஆண்டுகளாக சாதனையை முறியடித்துள்ளார். அதாவது, 7-வது வீரராக அல்லது அதற்கு கீழ் களமிறங்கி அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனை 35 ஆண்டுகளாக கபில் தேவ் வசம் இருந்து வந்தது. 1986-ம் ஆண்டு கான்பூரில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரானப் போட்டியில், 7-வது வீரராக களமிறங்கி கபில் தேவ் 163 ரன்கள் குவித்ததே இதுவரை சாதனையாக இருந்து வந்தது. இந்நிலையில், கபில் தேவின் இந்த சாதனையை இன்று ரவீந்திர ஜடேஜா முறியடித்துள்ளார்.

இலங்கை அணி தற்போது தனது முதல் இன்னிங்ஸில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….