ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியானது… முதல் போட்டியில் சென்னை அணி..!

இந்த ஆண்டு ஐபிஎல் 15-வது சீசன் இந்தியாவில் நடைபெற உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூருவில் 2 நாட்கள் நடைபெற்றது. ஏற்கனவே இருந்த 8 அணிகளுடன் இந்த ஆண்டு புதிதாக இரண்டு அணிகள் இணைந்துள்ளனர். இதனால், ஐபிஎல் போட்டிகள் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. இந்த சூழலில் பிசிசிஐ ஐபிஎல் போட்டிகள் வருகிற மார்ச் 26ஆம் தேதி தொடங்கி 29 வரை நடைபெறும் என அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. இதனால் ஐபிஎல் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். மேலும், ஐபிஎல் முதல் போட்டியில் சென்னை அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோத உள்ளது ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

மார்ச் 26 ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தாவை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது. மறுநாள், டெல்லியை அணியை மும்பை அணி எதிர்கொள்ள உள்ளது. விறுவிறுப்பாக நடைபெற உள்ள இந்த ஐபிஎல்லின் இறுதிப்போட்டி மே 29 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.