கிரிக்கெட் விதிமுறையில் அதிரடி திருத்தம்… எல்லா புகழும் அஸ்வினுக்கே..!

கிரிக்கெட்டில் இனி மன்கட் ரன் அவுட் என்பது அதிகாரப்பூர்வமானது என்பன உள்ளிட்ட பல விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜாஸ் பட்லரை, பஞ்சாப் கேப்டன் அஸ்வின் ‘மன்கட்’ அவுட் செய்தது அந்தத் தொடரில் பெரும் சர்ச்சையாகப் பேசப்பட்டது. அஸ்வின் பந்துவீசும்போது, பட்லர் நான்-ஸ்ட்ரைக்கர் பகுதியிலிருந்து வெளியேறியதைப் பார்த்து அவரை எச்சரிக்காமல் மன்கட் அவுட் செய்தார்.கிரிக்கெட் விதிமுறைகள்படி, மன்கட் அவுட் சரியானது என்றாலும் தார்மீக அறத்தின்படி அது கிரிக்கெட் பிரபலங்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பட்லரை மன்கட் அவுட் செய்ததால் ராஜஸ்தான் அணி 14 ரன்களில் தோல்வி அடைந்தது.

அப்போது கிரிக்கெட் வீரர்கள் பலராலும் ரவிச்சந்திரன் அஸ்வினின் இந்த செயல் பெரிதும் விமர்சிக்கப்பட்டது.இந்த நிலையில் ‘மன்கட்’ அதிகாரப்பூர்வமான ரன் அவுட்டாக இருக்கும் என மேரிலேபோன் கிரிக்கெட் கிளப் (MCC) அறிவித்துள்ளது. இனி யாரும் இதனை நியாயமற்ற செயல், ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் கிடையாது எனக்கூற முடியாது எனவும் எம்சிசி தெரிவித்துள்ளது. வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் போட்டிகளின் விதிமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வருவது, புதிய விதிமுறை உருவாக்குவது போன்ற கமிட்டியாக எம்சிசி உள்ளது. ஏற்கனவே கடந்த 2017-ஆம் ஆண்டு கிரிக்கெட் விதிமுறைகளில் சில மாற்றங்களை செய்தது எம்சிசி. இந்த நிலையில் கடந்த வாரம் புதிய மாற்றங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ள இந்த கிளப் புதிதாக அறிவித்துள்ள விதிமுறைகள் 2022 அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.