இவரா பெங்களூரு அணியின் கேப்டன்… உற்சாகத்தில் ரசிகர்கள்..!

இந்த ஆண்டு ஐபிஎல் 15-வது சீசன் இந்தியாவில் நடைபெற உள்ளது. ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூருவில் நடைபெற்று முடிவடைந்தது. இந்த ஆண்டு புதிதாக இரண்டு அணிகள் ஐபிஎல் போட்டிகளில் களமிறங்குகின்றன. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் வருகிற மார்ச் 26-ம் தேதியில் இருந்து தொடங்குகின்றது. இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய கேப்டன் யார் என்பது குறித்து தகவல் இன்று வெளியாகியுள்ளது.

2022-ம் ஆண்டுக்கான ஐபிஎல் 15-வது சீசன் வரும் மார்ச் 26-ம் தேதி முதல் மே 29-ம் தேதி வரை மகாராஷ்டிராவில் நடைபெறவுள்ளது. தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஐபிஎல் போட்டியில், புதிதாக 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதை அடுத்து, 10 அணிகளும் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் அட்டவணை வெளியிடப்பட்டது. இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணியும் தலா 14 லீக் போட்டிகளில் மோதுகிறது.

ஐபிஎல் போட்டி தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் நாளுக்கு ஒரு அப்பேட் கொடுத்து வருகிறது. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அகமதாபாத், லக்னோ அணிகள் கூட தங்களது அணியின் கேப்டன்களை அறிவித்து விட்டன. ஆனால், ஐபிஎல் போட்டி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து விளையாடி வரும் பெங்களூரு அணி மட்டும் இன்னும் புதிய கேப்டனை அறிவிக்கவில்லை.

பெங்களூரு அணியில் கேப்டன்சி பதவிக்கு ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல், தென்னாப்பிரிக்க வீரர் டூ பிளசிஸ், தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஆகியோர் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் பெங்களூரு அணியின் புதிய கேப்டன் யார் என்று வரும் 12-ம் தேதி மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளதாக அந்த அணியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் இந்த புதிய அறிவிப்பால் ஐபிஎல் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.