இறப்பதற்கு முன் வார்னே எனக்கு மெசேஜ் செய்தார்… ஆஸ்திரேலிய வீரர் பேட்டி..!

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே அண்மையில் மர்மமான முறையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

அவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இரங்கல் செய்தியை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன கில்கிறிஸ்ட், ஷேன் வார்னே இறப்பதற்கு முன் தனக்கு மெசேஜ் செய்ததாக தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, இறப்பதற்கு சுமார் எட்டு மணி நேரத்திற்கு முன்னதாக வார்னே எனக்கு மெசேஜ் செய்திருந்தார். அந்த மெசேஜில் மார்ச் 4 அன்று உயிரிழந்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரருக்கு செலுத்தப்பட்ட இறுதி அஞ்சலி குறித்து சொல்லியிருந்தார் என தெரிவித்துள்ளார் கில்கிறிஸ்ட். மேலும் அந்த மெசேஜை ஒருபோதும் தான் டெலிட் செய்யப் போவதில்லை என்றும் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்காக 145 டெஸ்ட், 194 ஒருநாள் போட்டிகளில் வார்னே விளையாடியுள்ளார். மாரடைப்பு காரணமாக உயிரிழந்த வார்னேவுக்கு வயது 52 என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….