பயிற்சியாளராக மாறிய இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்..!

ஐபிஎல் 15-வது சீசன் தோட்டிகள் வருகிற மார்ச் 26 முதல் தொடங்கி வருகிற மே 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல் அணியின் புதிய வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

2022-ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் 26-ம் தேதி மகாராஷ்டிராவில் துவங்க உள்ளது. இந்த ஆண்டு புதிதாக 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதால், 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும் தலா 14 சூப்பர் லீக் போட்டிகளில் விளையாட உள்ளது. இதனால், ஒவ்வொரு அணியின் நிர்வாகமும் தங்களது அணியை பலப்படுத்த பல மாற்றங்களை செய்து வருகிறது.

அந்தவகையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், கடந்த ஆண்டு ஓய்வுபெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரான லசித் மலிங்காவை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளது. ஐபிஎல் போட்டி துவங்கியது முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒன்பது சீசன்களில் விளையாடிய லசித் மலிங்கா, 170 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர் என்ற பெருமையை பெற்றவராக உள்ளார்.

கடந்த 2018- ம் ஆண்டில், மும்பை அணியின் பந்துவீச்சு வழிகாட்டியாக இருந்த மலிங்கா, சர்வதேச போட்டிகளில் ஓய்வுபெற்ற பின்னர், இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 தொடரில், இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

ஐபிஎல் 15-வது சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.