சென்னையிலிருந்து சென்று பெங்களூருக்கு கேப்டனாக மாறிய தென் ஆப்பிரிக்க வீரர்..!

ஐபிஎல் 15-வது சீசன் வருகிற மார்ச் 26-ஆம் தேதி முதல் தொடங்கி மே 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல்-ல் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அனைத்து அணிகளும் தங்களது கேப்டன்களை அறிவித்து வந்த நிலையில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக தென்ஆப்பிரிக்கா வீரர் டு பிளிசிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும்,அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆகவும் விளையாடி வந்தவர் டு பிளிசிஸ். அவர் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பெங்களூரு அணியை வழிநடத்தி வந்தார். அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகியதை அடுத்து தற்போது அணி நிர்வாகம் டு பிளிசிஸிசை புதிய கேப்டனாக அறிவித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் பங்குபெறும் அனைத்து அணிகளும் தங்களது கேப்டன்களை அறிவித்து வந்த நிலையில், பெங்களூரு அணி மட்டும் காலம் தாழ்த்தியது. ஆனால், அதற்கான விடை இன்று ரசிகர்களுக்கு அதிகாரப்பூர்வமாக கிடைத்துள்ளது. சென்னை அணியில் இருந்து டு பிளிசிஸ் பெங்களூரால் ஏலத்தில் எடுக்கப்பட்ட பிறகு அவர் அந்த அணியின் கேப்டனாக அறிவிக்கப்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வந்தனர். அவர்களின் கூற்று இன்று உறுதியாகியுள்ளது.

மார்ச் 26-ஆம் தேதி தொடங்க இருக்கும் ஐபிஎல் 15-வது சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

நெருக்கடி நிலைக்கு இம்ரான் கான் அரசே காரணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்த நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…