303 ரன்களுக்கு டிக்ளேர் செய்த இந்திய அணி..!

இந்திய அணி இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் எடுத்தது ஆட்டத்தினை டிக்ளேர் செய்தது.

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தனது முதல் இன்னிங்சில் விளையாடிய இலங்கை அணி 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 67 ரன்களும், ரிஷப் பண்ட் 50 ரன்களும் குவித்தனர்.

இறுதியில் இந்திய அணி 303 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து விளையாடிக் கொண்டிருந்த இந்திய அணி ஆட்டத்தினை டிக்ளேர் செய்தது. இதன்மூலம் இலங்கை அணியின் வெற்றிக்கு 447 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

447 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. சற்றுமுன் வரை அந்த அணி ஒரு ரன்னுக்கு ஒரு விக்கெட் இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…