109 ரன்னில் சுருண்டது இலங்கை அணி..!

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இலங்கை அணி 109 ரன்களுக்கு தனது முதல் இன்னிங்சில் ஆட்டமிழந்தது.

முன்னதாக தனது முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 252 ரன்கள் எடுத்தது ஆட்டம் இழந்தது. இதனையடுத்து நேற்று தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி தொடக்கம் முதலே தடுமாறியது. அந்த அணியின் முன்வரிசை ஆட்டக்காரர்களான குஷால் மெண்டிஸ் 2 ரன்கள், கேப்டன் கருணாரத்னே 4 ரன்களிலும் மற்றும் லஹிரு திரிமண்ணே 8 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இலங்கை அணியின் சார்பில் நிதானமாக விளையாடிய ஏஞ்சலோ மேத்யூஸ் 43 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இலங்கை அணி 109 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இந்திய அணியின் சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் முகமது சமி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

நெருக்கடி நிலைக்கு இம்ரான் கான் அரசே காரணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்த நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…