பயிற்சியை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ்… அனல் பறக்கும் ஐபிஎல் களம்..!

ஐபிஎல் 15 வது சீசன் வருகிற மார்ச் 26-ம் தேதி தொடங்கி மே 29 வரை நடைபெற உள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் புதிதாக இரண்டு அணிகள் களம் இறங்க உள்ளன. இன்னும் சில தினங்களில் ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் ஒவ்வொரு அணியினரும் தினம் தினம் புதிய அப்டேட்களை கொடுத்து வருகின்றன. அந்த வகையில், இன்று மும்பை இந்தியன்ஸ் அணி பயிற்சியை தொடங்கியுள்ளது.

இலங்கை அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி முடிவடைந்தவுடன் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்து கொண்டார். அதேபோல இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்ட இஷான் கிஷன் முழு உடல் தகுதியுடன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் மும்பை இந்தியன்ஸ் அணி அந்த அணியின் புதிய ஜெர்சியை அறிமுகம் செய்தது.

மும்பை அணிகள் தவிர மற்ற அணிகளும் தங்களது புதிய ஜெர்சியையும், அணியின் பயிற்சி வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். இதனால் ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் பார்வையாளர்களுடன் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த விஷயம் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

வருகிற மார்ச் 26-ஆம் தேதி முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.