இந்தியப் பெண்ணை திருமணம் செய்த ஆஸ்திரேலிய வீரர்..!

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் மாக்ஸ்வல் இந்திய வம்சாவளி பெண் ஒருவரை இன்று மணம் புரிந்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான மேக்ஸ்வெல் சில ஆண்டுகளாக கிரிக்கெட்டிலிருந்து கோயில் இருக்க விரும்புவதாக அறிவித்திருந்தார். அதன் பின்னர் அவர் ஆஸ்திரேலிய அணியுடன் இணைந்து விளையாடத் தொடங்கினார். மேலும், ஐபிஎல் போட்டிகளில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகளுக்காக விளையாடி வந்தார். இந்த ஆண்டு அவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தக்கவைத்துள்ளது.

இந்நிலையில், கடந்த 2020 பிப்ரவரியில் மேக்ஸ்வெல்லுக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய பெண்ணான வினி ராமனுக்கும் இந்திய பாரம்பரிய முறைப்படி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, வினி ராமன் – மேக்ஸ்வெல் ஜோடிக்கு நேற்று திருமணம் நடந்துள்ளது. இது தொடர்பாக மேக்ஸ்வெல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், காதல் என்பது நிறைவுக்கான தேடல். இப்போது எனக்கு நிறைவடைந்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

அதே போல வினி ராமனும் கணவர் மேக்ஸ்வெல்லுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் தம்பதிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேக்ஸ்வெல் திருமணம் செய்துகொண்ட வினி ராமனின் பெற்றோர் தென் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.