வெளியானது மிதாலி ராஜ் பயோபிக் டீசர்..!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜின் பயோபிக் திரைப்படமான ஷபாஸ் மித்து திரைப்படத்தின் டீசர் ஷபாஸ் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தில் மிதாலி கதாபாத்திரத்திரத்தில் நடிகை டாப்சி நடித்துள்ளார். Viacom 18 ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இயக்குனர் ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கியுள்ளார்.

கிரிக்கெட் போட்டிகளில் ஆண்கள் ஆதிக்கம் செலுத்திவந்த காலகட்டத்தில் தன்னுடைய கடின முயற்சியால் தனக்கென ஒரு இடத்தை தேடிக் கொண்டவர் மிதாலி ராஜ். 39 வயதான மிதாலி கடந்த 1999 முதல் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் களத்தில் விளையாடி வருகிறார். தற்போது அவர் நடப்பு மகளிர் உலக கோப்பை தொடரில் இந்திய அணியை வழிநடத்தி வருகிறார். இந்நிலையில் 56 நொடிகள் ஓடும் ஷபாஸ் மித்து டீசர் தற்போது வெளியாகி உள்ளது. 

இந்த ஜென்டில்மென் விளையாட்டில் தனது வெற்றிக் கதையை உருவாக்கியர் என சொல்லி டீசரை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை டாப்சி. இந்த படத்திற்காக மிதாலி ராஜின் தோழியும், முன்னாள் இந்திய வீராங்கனையுமான நூஷின் அல் கதீரிடம் நடிகை டாப்சி சிறப்பு பயிற்சி பெற்றிருந்தார்.

கடந்த நவம்பர் மாதமே படப்பிடிப்புகள் முடிவடைந்தன. இந்நிலையில், படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

ஊடகத்துறையினரை ஊக்குவித்த மா.சுப்பிரமணியன்… என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற ஊடகவியாளர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு…