அரசியலில் குதிக்கும் ஹர்பஜன் சிங்..!

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் மாநிலங்களவை வேட்பாளராக ஆம் ஆத்மி சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாக உள்ள உறுப்பினர்களுக்கான இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் வருகிற 31ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் பஞ்சாப் மாநிலத்தில் 5 இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.

அண்மையில் நடைபெற்ற பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் 117 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக பகவந்த் சிங் பொறுப்பேற்றார். இந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், டெல்லி ஜல் போர்டு துணைத் தலைவர் ராகவ் சதா, ஐஐடி பேராசிரியர் டாக்டர் சந்தீப் பதக் மற்றும் லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகத்தின் வேந்தர் அசோக் மிட்டல் ஆகிய 5 பேரை ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை எம்.பி. வேட்பாளராக அறிவித்துள்ளது. இதன்மூலம் மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியின் பலம் 3-ல் இருந்து 8 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 1998 ஆம் ஆண்டு அறிமுகமானவர். இந்திய அணிக்காக அவர் கடந்த 23 ஆண்டுகளாக தன்னுடைய சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். 2011ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றியது. அப்போது இந்திய அணியில் ஒரு முக்கிய அங்கமாக திகழ்ந்தவர் ஹர்பஜன் சிங்.

ஹர்பஜன் சிங் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *