முதலில் பயந்தேன், இப்போது மகிழ்ச்சியாக உள்ளது… பிரபல வேகப்பந்து வீச்சாளர் பேட்டி..!

ஐபிஎல் 15-வது சீசன் வருகிற மார்ச் 26 முதல் தொடங்க உள்ளது. இந்த ஆண்டு புதிதாக இரண்டு அணிகள் களம் இறங்க உள்ளன. ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் மும்பை அணியினால் ஏலத்தில் எடுக்கப்பட்ட இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட் இந்த ஆண்டு ஐபிஎல் குறித்து மனம் திறந்துள்ளார்.

ஐபிஎல் கோப்பையை ஐந்து முறை வென்ற அணி மும்பை இன்டியன்ஸ். அந்த அணிக்காக விளையாட மெகா ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார் ஜெய்தேவ் உனட்கட். மும்பை அணி அவரை 1.30 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

இதுகுறித்து உனட்கட் பேசி இருப்பதாவது, இந்த சீசனை நான் ஆவலோடு எதிர்பார்த்து காத்துள்ளேன். காலம் காலமாக ஐபிஎல் அரங்கை ஆட்சி செய்யும் அணியில் இப்போது நானும் ஒருவன் என்பதில் மகிழ்ச்சி. ஏலத்தின்போது வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் எனது பெயர் கடைசியாக இருந்தது. அதை பார்த்து எனக்கும் கொஞ்சம் பதட்டம் ஏற்பட்டது. இறுதியில் நான் மும்பை அணியால் வாங்கப்பட்டேன். சிறு வயது முதலே எனது ரோல் மாடலாக உள்ள ஷேன் பாண்ட் மற்றும் ஜாகீர் கானுடன் இணைந்து பணியாற்றுவதில் சந்தோஷம். மேலும் களத்தில் பும்ராவுடன் பந்து வீச உள்ளது கூடுதல் போனஸ் எனத் தெரிவித்துள்ளார் உனட்கட்.

30 வயதான அவர் ஐபிஎல் களத்தில் கொல்கத்தா, பெங்களூரு, டெல்லி, புனே மற்றும் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.