புதிய கேப்டனுக்கு வாழ்த்து கூறிய சின்ன தல..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை அணியின் கேப்டனாக இருந்து வந்த மகேந்திரசிங் தோனி தனது கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக இன்று திடீரென அறிவித்தார். இதனையடுத்து, ஜடேஜா சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரவீந்திர ஜடேஜாவுக்கு, அந்த அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டர் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது, என் சகோதரனுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கியது த்ரில்லாக இருக்கிறது. நாங்கள் இருவரும் வளர்ந்து வந்த ஒரு அணியின் தலைமையை ஏற்க, அவரை விட சிறப்பானவர் வேறு யாரும் இருப்பார்கள் என்று, நான் யாரையும் நினைக்கவில்லை.

ஜடேஜாவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு மகிழ்ச்சியான தருணம். அனைவரின் எதிர்பார்ப்புகளுக்கும், அன்பிற்கும் ஏற்ப நீங்கள் செயல்படுவீர்கள் என்று நான் நம்புகிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.