விராட் கோலி வயித்துக்குள்ள பட்டாம்பூச்சி பறக்குதாம்..!

ஐபிஎல் 15-வது சீசன் இன்று முதல் கோலாகலமாக தொடங்குகிறது. இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறப்பது போல் உள்ளது என தெரிவித்துள்ளார்.
விராட் கோலி கடந்த 2013ம் ஆண்டு முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக அந்த அணியை வழி நடத்தி வந்தார். இந்நிலையில், இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் டு பிளிசிஸ் பெங்களூரு அணியை வழிநடத்த உள்ளார்.
நடப்பு சீசனில் ரன் குவிக்கும் முனைப்போடு பயிற்சி மேற்கொண்டு வரும் அவர் தனது வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறப்பது போல் உணர்வதாக தெரிவித்துள்ளார். அதற்கான காரணத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவதுவார இறுதி நாளன்று நடைபெற உள்ள போட்டியை எதிர்கொள்ள தயாராகி வருகிறோம். ஐபிஎல் மீதான ஆர்வமும் மோகமும் தீயாக பரவி இருக்கிறது. இதனை ரொம்பவே எதிர்பார்த்து உள்ளேன். தொடர் தொடங்குவதற்கு முன்னதாக வயிற்றுக்குள் பட்டாம் பூச்சி பறப்பது போல உள்ளது என தெரிவித்துள்ளார்.
பெங்களூர் அணி நாளை நடைபெறவுள்ள போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் பலப்பரீட்சை செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.