13 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் சாதித்த மேற்கிந்தியத் தீவுகள்..!

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் புதிய சாதனை ஒன்றையும் அந்த அணி படைத்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, முதல் இன்னிங்ஸில் 204 ரன்களும் மேற்கு இந்திய தீவுகள் அணி 297 ரன்களும் சேர்த்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 120 ரன்களுக்கு சுருண்டது. இதனால், 28 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் மேற்கிந்தியத் தீவுகள் அணி கைப்பற்றி அசத்தியது. 2009-ஆம் ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை மேற்கு இந்திய தீவுகள் அணி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.