இமாலய இலக்கை எளிதில் எட்டிய லக்னோ..!

ஐபிஎல் 15-வது சீசனின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மோதின. இந்த போட்டியில் 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை எளிதில் வெற்றி கிடைத்தது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்.

முன்னதாக, டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தனது முதல் பேட்டிங்கை தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் ராபின் உத்தப்பா களம் இறங்கினர். ராபின் உத்தப்பா போட்டியின் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அதிரடியாக தொடங்கினார். அதன் பின்னரும் அவர் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மற்ற தொடக்க ஆட்டக்காரரான ருத்ராஜ் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.

அதன்பின் ராபின் உத்தப்பாவுடன் ஜோடி சேர்ந்தார் மொயின் அலி. இவர்கள் இருவரும் அதிரடியாக விளையாட சென்னை அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. அதிரடியாக ஆடிய ராபின் உத்தப்பா 27 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடங்கும். மொயின் அலி 35 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய, சென்னை அணியின் வீரர் சிவம் துபே ஒரு ரன்னில் அரைசதத்தை தவறவிட்டார். கடைசி நேரத்தில் தோனி மற்றும் ஜடேஜா அதிரடி காட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 210 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து, 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கியது லக்னோ. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கே.எல் ராகுல் மற்றும் குயின்டன் டி காக் அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்தி இருந்தனர். லக்னோ அணி தனது முதல் விக்கெட்டை 99 ரன்களில் இழந்தது. கேப்டன் கே எல் ராகுல் 40 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டி காக் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 45 பந்துகளில் 61 ரன்கள் குவித்ததார். அதில் 9 பவுண்டரிகள் அடங்கும்.

அதன்பின் களமிறங்கிய மனிஷ் பாண்டே 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இருப்பினும் அந்த அணியின் எட்வர்ட் லூயிஸ் மற்றும் இளம் வீரர் பதோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். சிறப்பாக ஆடிய எட்வர்ட் 23 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும். இளம் வீரர் பதோனி 9 பந்துகளில் 19 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் லக்னோ அணி இந்த சீசனில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

லக்னோ அணியின் சார்பில் சிறப்பாக விளையாடிய எட்வர்டுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…