பந்து வீச்சை தேர்வு செய்த மும்பை இந்தியன்ஸ்..!

ஐபிஎல் 15-வது சீசனில் இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி மும்பையில் உள்ள டி ஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின் களமிறங்கிய படிக்கல் 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

தற்போது வரை அந்த அணி 11 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் 76 ரன்களுடனும், அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 21 ரன்களுடனும் களத்தில் விளையாடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

நெருக்கடி நிலைக்கு இம்ரான் கான் அரசே காரணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்த நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…