பிறந்தநாளில் சச்சின் சாதனையை முறியடித்த டாம் லாதம்..!

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டாம் லாதம் தனது பிறந்த நாளில் தனி நபராக அதிக ரன்கள் குவித்தவர்களில் இத்தனை ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.

நெதர்லாந்து அணியுடனான 2-வது ஒருநாள் போட்டியை நியூசிலாந்து அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி 2 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதற்கு முக்கியக் காரணம் அந்த அணியின் பேட்ஸ்மேன் டாம் லாதம் ஆவார்.

நியூசிலாந்து அணி 89 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடிய கேப்டன் டாம் லாதம் 123 பந்துகளில் 140 ரன்கள் குவித்து அசத்தினார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் சுவாரஸ்யம் என்னவென்றால் இன்று கேப்டன் டாம் லாதமின் பிறந்த நாள் ஆகும். இதற்கு முன்னதாக கிரிக்கெட் வீரர் ஒருவர் அவரது பிறந்த நாளில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமை சச்சின் வசம் இருந்தது. அவர் 1998 ஆம் ஆண்டு அவருடைய பிறந்த நாளில் 134 ரன்கள் குவித்தது இதுவரை தனிநபர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன்களாக இருந்து வந்தது. இந்த 24 ஆண்டு கால சாதனையை இன்று டாம் லாதம் முறியடித்துள்ளார்.

இவர்களுக்கு அடுத்தபடியாக கடந்த 2011 ஆம் ஆண்டு தனது பிறந்தநாளில் 131 ரன்கள் குவித்த நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவரைத் தொடர்ந்து இலங்கை அணியின் சனத் ஜெயசூரியா நான்காவது இடத்திலும், இந்திய அணியின் வினோத் காம்ப்ளி 5-வது இடத்திலும் இருப்பது குறிபிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

நெருக்கடி நிலைக்கு இம்ரான் கான் அரசே காரணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்த நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…