“அது பந்து இல்ல புல்லெட்”! – அதிவேக பந்தை வீசிய உம்ரான் மாலிக்…

2022 க்கான “IPL” தொடரின் அனைத்து லீக் ஆட்டங்களும் முடிவுக்கு வரும் நிலையில், இந்த தொடரின் சிறந்த வேக பந்து வீச்சாளராக திகழ்கிறார் “உம்ரான் மாலிக்”. “சன் ரைசர்ஸ் ஐதராபாத்” அணிக்காக ஆடி வரும் மாலிக், மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசுவதில் வல்லவர். சமீபத்தில் இந்தியாவை சேர்ந்த பந்துவீச்சாளர்கள் இவ்வளவு வேகமாக பந்து வீசி யாரும் பார்த்தது இல்லை.

இதுவரை உம்ரான் பத்து போட்டிகளில் ஆடி, 15 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஒரு போட்டியில் சிறந்த பந்து வீச்சாக, குஜராத் அணிக்கு எதிராக 25 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார். அந்த போட்டியில் ஐந்தில் நான்கு நேரடியாக ஸ்டம்ப்புகளை சிதறடித்தவை.

இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக சமீபத்தில் ஆடிய ஆட்டத்தின், கடைசி ஓவரின் நான்காவது பந்தில், “உம்ரான் மாலிக்” வீசிய பந்து, மணிக்கு 157 கீ.மீ. என்று பதிவானது.இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக சமீபத்தில் ஆடிய ஆட்டத்தின், கடைசி ஓவரின் நான்காவது பந்தில், “உம்ரான் மாலிக்” வீசிய பந்து, மணிக்கு 157 கீ.மீ. என்று பதிவானது.

“ரோவ்மன் பவல்” க்கு எதிராக வீசப்பட்ட அந்த பந்தை அவர் அனாயசமாக பௌண்டரிக்கு அடித்தார். இருந்த போதிலும் இந்த தொடரின் அதிவேக பந்தாக இது பதிவானது. “மிச்சேல் ஸ்டார்க்” வீசிய பந்து மணிக்கு 160.4 கீ.மீ. வேகத்தில் பதிவானது தான் இன்று வரை உலக சாதனையாக உள்ளது. விரைவில் அதை உம்ரான் மாலிக் தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

இந்த பந்து வீச்சை பார்த்து, “அவர் வீசுவது பந்தா இல்லை புல்லட்டா” என்று புகழ்ந்து வருகிறார்கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…